இயக்குனர் பா.ரஞ்சித் நடத்திவரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் குஜராத் எம்.எல்.ஏ வும், சமூக செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டார். சமூக மாற்றத்திற்கான விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஜிக்னேஷ் மேவானி சாதிகளை தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டும் என பேசினார். மேலும் அவர், 'ஜாதியை ஒட்டு மொத்தமாக குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். மதச்சார்பற்ற சமூகத்தை மதிக்கும் நிலையில் அரசில் உள்ளவர்கள் இல்லை; சாதி ரீதியாக தான் இங்கு எல்லாம் இன்றும் நடந்து வருகிறது. இதனை மாற்ற வேண்டும். மேலும் இதற்காக பாடுபட்ட பெரியாருக்கு எனது வீர வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்' என கூறினார்.