ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துணை ராணுவ படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி ஜேஎம்எம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.