ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு...

ஜார்க்க‌ண்ட் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

jharkhand phase 1 assembly election

81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடக்கி நடைபெறுகிறது. நக்சல் ஆதிக்கம் மிகுந்த மாநிலம் என்பதால் தேர்தல் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தக்கட்ட தேர்தலும் முடிவடைந்த பிறகு வரும் டிசம்பர் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

elections jharkand
இதையும் படியுங்கள்
Subscribe