Advertisment

மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்

jharkhand palamu district love and marriage young woman issue

Advertisment

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் கிலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைசேர்ந்தவர்மனோஜ்குமார் சிங். இவருக்கு கடந்த மே 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற இளம்பெண் ஒருவரை திருமணம்செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா குமாரிஜிதேந்திரா விஸ்வகர்மா என்ற வாலிபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் இவர்கள்திருமணத்திற்கும் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பிரியங்காவை அவரது குடும்பத்தினர் மனோஜ்குமார் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த சூழ்நிலையில் பிரியங்காவால் தனது காதலன் ஜிதேந்திரா விஸ்வகர்மாவை மறக்க முடியவில்லை. இருவரும் தினமும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். பிரியங்காவை அழைத்துச் செல்ல அவர் வசித்து வரும் கிராமத்திற்கு ஜிதேந்திரா வந்தார். இதையடுத்து திட்டமிட்டபடி இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இவர்கள் இருவரும்கிராமத்தை விட்டுச் செல்வதை அந்தகிராம மக்கள் சிலர் பார்த்து இருவரையும் பிடித்து பிரியங்கா கணவர் மனோஜ்குமாரிடம்ஒப்படைத்து விட்டனர். ஆனால் மனோஜ்குமார் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை அவரது காதலனிடமேஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பைஏற்படுத்தியது.

marriage lovers jharkand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe