நம் மாநிலத்தின் முதல்வர் யார்? என ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் ஜார்க்கண்ட் கல்வியமைச்சர் கேட்ட போது, பள்ளி மாணவர் ஒருவர் அமித்ஷா என கூறிய சம்பவம் அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisment

jharkhand minister shocked by the answers given by school students

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த ஆண்டு இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அம்மாநில முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன். அவரது அமைச்சரவையில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி கல்வியமைச்சராக பொறுப்பேற்றார் ஜகர்நாத் மாத்தோ. கல்வியமைச்சராக பதவியேற்ற அவர், ராம்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினார்.

Advertisment

அப்போது ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் உரையாடிய அவர், அங்கிருந்த மாணவர் ஒருவரிடம், நம் மாநிலத்தின் கல்வியமைச்சர் யார்? என கேள்வியெழுப்பினார், அதற்கு அந்த மாணவன், ஹேமந்த சோரன் என பதிலளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாத்தோ, மற்றொரு சிறுவனிடம், நம் மாநிலத்தின் முதல்வர் யார்? என கேள்வியெழுப்பினார். அதற்கு அந்த மாணவர் அமித்ஷா என பதிலளித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், மாநிலத்தில் கல்வித்தரம் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 மாணவர்கள் பயிலும் அந்த பள்ளியிலும் கல்வியின் தரம் இவ்வளவு மோசமாக இருப்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள, கல்வித்துறை உயரதிகாரி ராம்கர் மாவட்டத்தின் துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.