Advertisment

இரண்டாவது மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

jharkhand issue husband and wife 

Advertisment

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாகிப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபிகா பகதின்என்ற இளம் பெண் (வயது 22). இவர் தில்தார் அன்சாரி என்ற இளைஞரைகாதலித்து வந்த நிலையில் திருமணம் செய்யாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து உள்ளனர். அன்சாரிக்கு ரூபிகா இரண்டாவது மனைவி ஆவார்.

இந்நிலையில் தனது மனைவி மாயமானதாகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். மேலும் ரூபிகா குடும்பத்தினரும், தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர். மேலும் அப்புகாரில் தில்தார் மீது சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவ்வழக்கைத்தீவிரமாக விசாரித்து வந்தனர்.

அப்போது அங்குள்ளஅங்கன்வாடி, பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் இளம்பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடல்பாகங்களைக் கைப்பற்றினர். இது தொடர்பாகதில்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் தனது மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசியதாகத்தெரிவித்தார். மேலும் தன்மீது போலீசார் சந்தேகப்படக் கூடாது என்பதால் போலீசாரிடம் தனது மனைவியைக் காணவில்லை எனப்புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதுவரைக்கும்18 பாகங்கள் கிடைத்துள்ளதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தக் கொலை பற்றி போலீசார் தெரிவித்தது , "இந்தக் கொலைக்கான காரணம்பற்றி எதுவும் தெரியவில்லை. மரம் அறுக்கும் மின்சார இயந்திரம்மூலம் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம். மேலும் இந்தக் கொலையில் வேறுயாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்" என்றனர்.

jharkand police
இதையும் படியுங்கள்
Subscribe