Advertisment

ரயில்வே பராமரிப்பு பணி; ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிகழ்ந்த சோகம்

jharkhand dhanbad nearest railway station nichitpur contract railway workers incident 

ஜார்கண்ட்மாநிலத்தில் ரயில்வே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

Advertisment

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நிச்சித்பூர் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே இன்று ரயில்வே துறை சார்ந்த மின்சார பராமரிப்பு பணிகள்நடைபெற்றது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள்பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக 25 ஆயிரம் வோல்ட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்கம்பி மீது மின்கம்பம் ஒன்று விழுந்துள்ளது. அப்போது பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் போது பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அங்கு இருந்துமீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisment

இந்த சம்பவம்நடைபெற்ற இடத்திற்குஉடனடியாக விரைந்த ரயில்வே துறை அதிகாரிகள்,இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கி ஆறு தொழிலாளர்கள்உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தி உள்ளது.

jharkand railway
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe