
இந்தியாவில்கரோனாபரவல் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனாபரவலை கட்டுப்படுத்த பலநடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. டெல்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
இந்தநிலையில்நேற்று பிரதமர் மோடி ஆந்திரா, தெலங்கனா, ஒடிசா, ஜார்க்கண்ட்ஆகிய நான்கு மாநிலங்களில் நிலவவும்கரோனாநிலை குறித்து அம்மாநில முதல்வர்களுடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார்.
பின்னர், இந்த உரையாடல்தொடர்பாகஜார்க்கண்ட்முதல்வர்ஹேமந்த் சோரன் ட்வீட் ஒன்றைப்பதிவிட்டார். அந்த டீவீட்டில் ஹேமந்த் சோரன், "இன்று மரியாதைக்குரிய பிரதமர் என்னை அழைத்தார். அவர் தனது மனதில் உள்ளதை மட்டுமேபேசினார். பயனுள்ள எதையாவது பேசியிருந்தால், நான் பேசுவதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்திருந்தார். ஹேமந்த் சோரனின்இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில்ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியுள்ளஜார்க்கண்ட் மாநில அரசுத்துறை வட்டாரங்கள், பிரதமருடனான ஆலோசனையின்போது, தனதுகவலைகள் குறித்து பேசஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அனுமதிக்கப்படவில்லை என்றும், அதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)