Advertisment

ஜார்க்கண்ட் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை

Jharkhand CM Enforcement Directorate investigation

Advertisment

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்னர். மேலும் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டின் முன்பும் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கத்துறை அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Jharkhand
இதையும் படியுங்கள்
Subscribe