Advertisment

திருப்பதியில் ரூ.19 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயம்... பாஜக பொதுச்செயலாளர் பரபரப்பு புகார்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 19.16 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Advertisment

jewels went missing in thirupathi temple

தினமும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கையாக நகைகள் மற்றும் பணம் வழங்குவார்கள். அப்படி சேமித்த சுமார் 9800 டன் நகைகள் திருப்பதி கோயில் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 19.16 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளர் பானுபிரகாஷ் கூறுகையில், "வெள்ளி கிரீடம், தங்கம் மோதிரம், தங்கம் நெக்லஸ் போன்ற நகைகளை காணவில்லை. இதில் ஒரு குறிப்பிட்ட நபர் மீது மட்டும் பழி சுமத்தி தப்பிப்பது நியாயமில்லை. எனவே இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Thirupathi temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe