
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் அட்ரஸ் கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நகை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூரில் நடந்துள்ள இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர் ஒருவர் அட்ரஸ் கேட்பது போல் அவரிடம் பேச்சு கொடுக்கிறார். பின்னர் திடீரென எதிர்பாராத விதமாக அந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்கிறார். கையில் குடையுடன் நின்று கொண்டிருந்த அந்த மூதாட்டி கீழே விழுந்த நிலையில் அலறிக் கூச்சலிடும் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.