Advertisment

தீரன் பட பாணியில் நகைகள் கொள்ளை! 

Jewelry Robbery in pondicherry police investigation

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தமிழக பகுதியான பூஞ்சோலைகுப்பத்தைச் சேர்ந்த ராஜாராமன் வாழை பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில், ராஜாராமன் வீட்டிற்குள் முகமூடி அணிந்த 4 பேர் கொண்டமர்ம கும்பல் உள்ளே நுழைந்து, குடும்பத்தில் உள்ள அனைவரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் குடும்பத்தினர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 10 பவுன் நகை, பீரோவில் இருந்த 48,000 பணத்தை எடுத்து சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் ராஜாராம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது மர்ம கும்பல் பீரோவை உடைத்து ஒரு லட்சம் பணத்தை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Robbery Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe