Advertisment

ஜெ.விடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள்; தமிழக அரசுக்குப் பறந்த திடீர் உத்தரவு

Jewelery seized from J.; Sudden order to Tamil Nadu Govt

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியில் இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1999லிருந்து 96 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த பொழுது அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்ததுபெங்களூர்நீதிமன்றம். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஐந்து பெட்டிகளில் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர்பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளைத்தமிழக அரசு பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கில் வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழகஉள்துறை செயலாளர் ஆஜராகி, கர்நாடக வசம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளுமாறும், வழக்கு செலவு கட்டணமாக ரூபாய் 5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

admk Bangalore jayalalitha TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe