/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_64.jpg)
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் வர்மா. இவர் அந்த பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு, பவ்யா(22) மற்றும் காவ்யா(17), என்ற இரு மகள்களும், அபிஷத்(12) என்ற மகனும் இருந்தனர். இந்த குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முகேஷ் வர்மா தனது வாட்ஸ் அப் ஸ்டேஸில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது போல் புகைப்படஙக்ளை வைத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, முகேஷுடைய உறவினர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோரின் உடல்கள், தனித்தனி அறைகளில் கிடந்திருந்தது.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் முகேஷ் வர்மா, ரயில் நிலையத்திற்குச் சென்று எக்ஸ்பிரஸ் ரயில் முன் குதிக்க முயன்றார். இதனை கண்ட அங்குள்ளவர்கள், முகேஷ் வர்மாவை அங்கிருந்து வெளியேறச் செய்து அவரை காப்பாற்றினர். லேசான காயம் ஏற்பட்ட முகேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ஓடும் ரயிலின் முன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)