நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த பணியாளர்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பெற்று தர வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும் என "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
"ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்" (Air India Express) , "ஸ்பைஸ்ஜெட்" (Spice jet) , "இண்டிகோ" (Indigo) ஆகிய விமான நிறுவனங்களில் பணியில் சேர தொடங்கியுள்ளனர். இதில் 2-3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்ற "பைலட்கள்" , விமான பராமரிப்பு பொறியாளர்கள் உட்பட இவர்களின் மாத சம்பளம் ரூபாய் 1,50,000 முதல் 2,00,000 வரை தர இந்த விமான நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். இருப்பினும் "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் ஊழியர்கள் மாதம் ரூபாய் 4,00,000 வரை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் விமான பைலட்கள் மற்றும் விமான பராமரிப்பு பொறியாளர்கள் அதிக சம்பளத்தில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு செல்வது .
இதுவே முதல் முறை ஆகும். முன்பு வாங்கிய மாத சம்பளத்தில் இருந்து 30-50% வீதம் வரை குறைவான சம்பளத்தையே விமான ஊழியர்கள் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முற்றிலுமாக முடங்கியது. நிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
“இன்று காலை சக பைலட்டிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று விட முடிவு செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். பல ஊழியர்களும் தங்கள் தினசரி செலவுகளைக் கூட சந்திக்க முடியாத கஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்று நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டின் கேப்டன் அசிம் வாலியானி கூறியுள்ளார்.
வீட்டு வாடகையை கூட என்னால் கட்ட முடியவில்லை என்று ஒரு ஜெட் ஏர்வேஸில் வேலை பார்த்த ஊழியர் ஒவர் தெரிவித்தார். ‘கடந்த வாரம்தான் சக ஊழியர் மகன் சிகிச்சைக்காக நிதி திரட்டினோம், மருத்துவ பில்கள் லட்சக்கணக்கை தாண்டிய போதும், பையனைக் காப்பாற்ற முடியவில்லை’ என்று மற்றுமொரு ஊழியர் கூறியுள்ளார்.