Advertisment

“ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி”-ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தான் ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு இலவச உதவி திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் ஒரு சில திட்டங்கள் செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது. அதுபோல ஒரு திட்டம்தான் கண்ணொளி திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவ, மாணவியர் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் தேவையானவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூக்கு கண்ணாடியும் வழங்கப்பட உள்ளது.

Advertisment

jeganmohan reddy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஆந்திராவின் கர்னூலில் நேற்று நடைபெற்ற கண்ணொளி திட்டத்தை அவர் தொடங்கி வைத்து பின் பேசுகையில், “இந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை 3-ம் கட்ட கண்ணொளி திட்டம் அமலில் இருக்கும்” என்றார்.

Advertisment

மேலும் அதில், “மாநிலம் முழுவதும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த ரூ. 700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிகளிலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும். இந்த மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். ஆந்திராவில் புதிதாக 25 மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்” என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

Andhra jeganmohan reddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe