Advertisment

மூன்று வாகனங்கள் மீது மோதி கடைக்குள் புகுந்த ஜீப்; பரபரப்பு சிசிடிவி காட்சி

Jeep rammed three vehicles into the shop; Exciting CCTV footage

மருத்துவர் ஒருவர் ஓட்டிச் சென்றஜீப்பானது கட்டுப்பாட்டை இழந்துஎதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதோடு இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி அருகிலிருந்த கடைக்குள் நுழைந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதிக்கு உட்பட்ட பந்தளம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு காரின் மீதும் இரண்டாவதாக பெண் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீதும்மூன்றாவதாக இளைஞர் ஒருவர் வந்த இருசக்கர வாகனத்திலும் மோதி சாலையோரம் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்குள் அதிவேகமாக நுழைந்தது.

Advertisment

இதில் இருசக்கர வாகனங்களில்வந்த இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜீப்பை ஒட்டி வந்தது தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் என்பதும் செல்போனில் பேசிக்கொண்டே ஜீப்பை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

police Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe