
கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் போலீஸ் ஜீப் ஒன்று தலைகுப்புற விழுந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரியக்கோடு நெடுஞ்சாலையில் போலீஸ் ஜீப் ஒன்று அதிவேகத்தில் வந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென சாலை ஓரத்தில் உள்ள சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அந்த ஜீப்பில் பயணித்த காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தார். இந்நிலையில் போலீஸ் ஜீப் சாலையின் ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us