பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 12 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கன்னூத்மலை என்ற இடத்தில் சென்ற போது ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து காரில் பயணம் செய்த 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிக்கிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.