முதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

jee main exam results

ஆண்டு தோறும் இந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் பயில இந்தியா முழுமைக்குமாக சேர்த்து ஜே.இ.இ தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

இதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக முதல் 1000 இடங்களில் வெறும் 30 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இந்தாண்டு 1,61,319 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 38,705 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

exam result iit jee exam
இதையும் படியுங்கள்
Subscribe