கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நிலவி வரும் சூழலில், ஆளும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார்கள் என காங்கிரஸ் எம்.பி சுரேஷ் இன்று காலை தெரிவித்தார். அவர் தெரிவித்த சிறிது நேரத்தில் அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

Advertisment

jds mlas resigned their minister posts

அதனை தொடர்ந்து ஆளும் மஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷ் இன்று காலை பதவி விலகினார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த குமாரசாமி தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் திடீர் திருப்பமாக குமாரசாமி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இது அம்மாநில ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் விரைவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் என குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.