Advertisment

ஏலத்திற்கு வரும் ஜெயலலிதாவின் சொத்துக்கள்! 

Jayalalitha's properties to be auctioned!

Advertisment

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட கர்நாடகா அரசு, வழக்கறிஞரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கைக்கடிகாரங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை ஏலம் விட கர்நாடகா அரசு, வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலி என்பவரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட அரசு வழக்கறிஞரை நியமிக்கக் கோரி நரசிம்ம மூர்த்தி என்பவர் கர்நாடகா முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து கிரண் எஸ் ஜாவலி என்பவரை கர்நாடகா அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jayalalitha karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe