நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 18.11.19 இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வரை 20 நாட்கள் நடைபெறுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 20 நாட்களாக கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடக்க இருக்கும் நிலையில் ஜே.என்.யு மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறியும் ஜெ.என். பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்த போது, சஃப்தார்ஜன் கல்லறை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் முழுமையாக கல்வி கட்டண உயர்வை வாபஸ் பெற்றுக்கொள்ள் வேண்டும் என்றும், மேலும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளையும் நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் உறூதியாக இருக்கின்றனர்.