8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இந்தி கட்டாயம்; விளக்கமளித்த மத்திய அமைச்சர்...

dtrdgb

இந்தியா முழுவதும் புதிய பாட திட்டத்தில் 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததாக இன்று காலை செய்தி பரவியது. இந்த செய்தி பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'புதிய பாடத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழு, எந்த மொழியையும் கட்டாயமாக்க பரிந்துரைக்கவில்லை' என தெரிவித்துள்ளார். மேலும் மக்களை திசை திருப்பும் வகையில் இப்படி தவறான செய்தி பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அது மாதிரியான எந்த பரிந்துரையையும் அரசு செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Hindi imposition Prakash javatekar
இதையும் படியுங்கள்
Subscribe