ashwini upadhyay

Advertisment

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் காலனியத்துவ சட்டங்களுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமைபோராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், அந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் ராமரின்பெயரை உச்சரிக்க வேண்டும் எனவும் கோஷமிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கோஷமிட்டது தொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து டெல்லி காவல்துறை, இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் பாஜக பிரமுகர்அஸ்வினி உபாத்யாய்உள்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்குஎதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது எனஅஸ்வினி உபாத்யாய்கூறியுள்ளார். இந்தப் போராட்டத்திற்கு கரோனாகாரணமாக அனுமதி மறுக்கப்பட்டது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.