பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாங்தார் எல்லை பகுதிக்கு அருகே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மீது அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.

PAKISTAN ARMY INCIDENT  INDIA ARMY REPLY

Advertisment

Advertisment

அதன் தொடர்ச்சியாக இன்று (20/10/2019) காலை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதி மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பீரங்கி தாக்குதலை நடத்தி வருகிறது.