காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது தொடர்பான மசோதா மீதான வாக்கெடுப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது.

jammu kashmir related bills passes in rajya sabha pm narendra modi happy

அந்த வாக்கெடுப்பை புறக்கணித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால், மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.காஷ்மீர் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Amit shah jammu and kashmir Rajya Sabha related bill passes
இதையும் படியுங்கள்
Subscribe