Advertisment

புல்வாமாவில் மீண்டும் தாக்குதலா???

பாகிஸ்தான் உளவுப் பிரிவிலிருந்து அந்நாட்டு அரசிற்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. புல்வாமா, அவந்திப்போரா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisment

pulwama attack

இந்த தகவலை பாகிஸ்தான் அரசு இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. கடந்தமுறை நடந்தது போன்றே வாகனத்தில் சக்திவாய்ந்த ஐ.இ.டி. வெடிகுண்டுகளை நிரப்பி தாக்க உள்ளனராம்.

Advertisment

இதனால் இந்திய அரசு, இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்குமுன் பிப்ரவரி 14ம் தேதி, துணை ராணுவ வீரர்கள் விடுமுறை முடிந்து பேருந்துகளில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்களது பேருந்துகள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தபோது, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவன் ஏராளமான ஐ.இ.டி. வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரில் வந்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் (மே) 24ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில் ஐந்து துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan India indian army pulwama attack
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe