ஜம்மு- காஷ்மீரில் அதிகாரப்பூர்வ மொழிகள் அறிவிப்பு...

jammu kashmir official languages union cabinet approves

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (02/09/2020) காலை நடைபெற்றது.இதில் கரோனா தடுப்பு பணிகள், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஜம்மு- காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உருது, காஷ்மீரி, டோக்ரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்த மிஷன் கர்மயோகி திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

APPROVAL UNION CABINET jammu kashmir languages offical
இதையும் படியுங்கள்
Subscribe