ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெய்ஷ் பயங்கரவாதஅமைப்பை சேர்ந்த 10 பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/o90jdork_soldiers-jammu-and-kashmir-ndtv-file_625x300_23_February_19.jpg)
இதனையடுத்து ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அவந்திப்போரா, ஹிண்டன் உள்ளிட்ட விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சென்னை, மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Follow Us