ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட நிருபர்களுக்கு லஞ்சமா?

05:37 PM May 08, 2019 | santhoshb@nakk…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லேக் பகுதியில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் சிலர் தேர்தலில் சாதகமான செய்திகளை வெளியிட நிருபர்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்துள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பாஜவினர் ஒருங்கிணைத்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களுக்கு கடித உறைகள் வழங்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சிசிடிவியில் வெளியான காட்சியில் பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரய்னா முன்னிலையில் பாஜக மக்கள் பிரதிநிதி விக்ரம் ரந்தாவா பத்திரிக்கையாளர்களுக்கு கடித உறைகள் வழங்குவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சியில் தெரிய வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை லேக் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளூர் தேர்தல் அதிகாரியிடம் பாஜக மாநில தலைவர் ரவீந்தர் தங்களுக்கு லஞ்சம் தர முயன்றதாக புகார் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரக்கூட்டங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய கடித உறையை தான் வழங்கினோம் என்றும், எங்கள் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பத்திரிகையாளர்களின் ஒருவரான ரிஞ்சன் அங்மோ கூறுகையில் என்னையும் சேர்த்து நான்கு பத்திரிகையாளர்களுக்கு பாஜவினர் கடித உறைகளை வழங்கினர். அதை பிரித்துப் பார்க்க முற்பட்டபோது பாஜகவினர் அதை பிரித்து பார்க்க வேண்டாம் என்றும், அதில் அன்பளிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் உறையை பிரித்துப் பார்த்தோம்.

அதில் ரூபாய் 500 இருந்தது , பிறகு வேண்டாம் என்று அவர்களிடம் கூறினோம் . ஆனால் அந்த கடித உறைகளை வாங்க மறுப்பு தெரிவித்தார்கள். பின்பு நாங்கள் அந்த மேடையில் வைத்து விட்டு சென்று விட்டோம் என்றார். இது குறித்து ஜம்மு & காஷ்மீர் மாநில தேர்தலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா ,மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பெயரில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT