ADVERTISEMENT

காஷ்மீருக்கு 'யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானதே'- மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

06:38 PM Aug 05, 2019 | santhoshb@nakk…

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370- ஐ நீக்கியது தொடர்பான மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, காஷ்மீர் மாநில மசோதா மீதான விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசி வருகிறார். இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மசோதா மீதான விவாதத்தில் பேசி வரும் அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370, 35ஏ மூலம் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை, வளர்ச்சியும் ஏற்படவில்லை.


ADVERTISEMENT

ADVERTISEMENT

சில அரசியல்வாதிகளுக்கும், பணக்கார குடும்பங்களுக்கும் மட்டுமே சட்டப்பிரிவு 370 பயனளித்துள்ளது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 வளர்ச்சியை தடுத்தது. காஷ்மீருக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியது. ஆனால் அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். இதற்கிடையே காஷ்மீர் மாநில மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் தொடங்கியது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT