Advertisment

தீவிரவாத தொடர்பு; 10க்கும் மேற்பட்டவர்களை பதவி நீக்கம் செய்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்! 

jammu kashmir

Advertisment

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் பாதுகாப்பு படை வீரர்களும்வீர மரணமடைகிறார்கள். சமீபத்தில் ஜம்மு விமான தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில்தீவிரவாத தொடர்பு உள்ள 11 பேரை ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம், பதவியை விட்டு நீக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தீவிரவாதிகளுக்கு தகவல்கள் வழங்கிய இரண்டு போலீஸ்கான்ஸ்டபிள்களும்அடக்கம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 4 பேர் கல்வித் துறையை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் காவல்துறையை சேர்த்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், விவசாயத்துறை, மின்சாரத்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளில் தலா ஒருவரும்,ஷெர் இ காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரும் தீவிரவாத தொடர்புகள் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.

government jammu kashmir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe