ஜம்முவில் ஏழுமலையானை தரிசித்த மத்திய அமைச்சர் அமித்ஷா 

 jammu elumalaiyan temple pray amit sha 

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இதனால் திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் நெரிசலில்தரிசிக்கநீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து மக்களின் வசதிக்காககன்னியாகுமரி, சென்னை, டெல்லி, புவனேஷ்வர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 5 இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டது. அதன்படி இந்த கோவில்களில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் 6வது கோவில் ஜம்முவில் கட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது.அதனைத்தொடர்ந்து இன்றுகுடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாகலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். இதையடுத்துகோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.இதையடுத்துபக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் மணிப்பூர் மாநிலத்தில்மைத்தேயி சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்பாதயாத்திரை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு தொடர் அமைதி காத்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம்மூலம் கலவரத்தை தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்துமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளைஅனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Subscribe