Skip to main content

ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

JAMMU AND KASHMIR 4G SERVICE RESTORED


ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணையதளச் சேவை தொடங்கியுள்ளது. 

 

கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு- காஷ்மீர் முழுவதும் 4ஜி இணையதளச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் மின்சாரம் மற்றும் தகவல் துறையின் முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் 4ஜி இணையதளச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.

Next Story

புதினிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய இம்ரான் கான்!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

putin - imran

 

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து ரஷ்யா, உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் நுழைந்து முன்னேறி வருகிறது. இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது.

 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரஷ்யா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது புதினிடம், இம்ரான் கான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியுள்ளார். புதின் - இம்ரான் கான் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

 

பாகிஸ்தானின் அறிக்கையில், “இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகளின் நிலையை பிரதமர் (புதினிடம்) எடுத்துரைத்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்” என கூறப்பட்டுள்ளது.