‘எந்தவித எதிர்ப்பும் இல்லை, போராட்டமும் இல்லை’- அரசு தரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

jammu and kashmir

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு அதிமுக, பிஜு ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா கட்சி உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதா, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் எந்த மாதிரியான சூழ்நிலை நிகழ்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய பின்னர் ஜம்முவில் எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழவில்லை. எந்தவித எதிர்ப்பும் இல்லை, போராட்டமும் இல்லை. மேலும், அங்கு அமைதி நிலவி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவித்துள்ளதாக ஏ என் ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே நடமாடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இன்னும் நீக்கப்படாமால் இருக்கிறது.

article 370 revoked jammu and kashmir
இதையும் படியுங்கள்
Subscribe