மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், சாமானியர்களைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
அந்தவகையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கேட்டுக்கொண்டுள்ளார்.