Advertisment

ஜெகன்மோகனுக்கு கரோனா பரிசோதனை... 10 நிமிடங்களில் வெளியான சோதனை முடிவுகள்...

மக்கள் அனைவரும் பயமில்லாமல் கரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாகக் கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

Advertisment

jaganmohan reddy undergoes corona test

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தவைரஸ் காரணமாக 14,000-க்கும் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் பயமில்லாமல் கரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாகக் கரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் இதுவரை 572 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் அம்மாநில அரசு தென்கொரியாவிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வாங்கியுள்ளது. இந்தக் கருவிகள் அண்மையில் ஆந்திரா வந்தடைந்த நிலையில், கரோனா அறிகுறிகள் உள்ள மக்கள் பயமில்லாமல் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டிருந்தார்.

Advertisment

http://onelink.to/nknapp

இந்நிலையில் நேற்று ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் தன்னைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார் ஜெகன்மோகன். 10 நிமிடத்தில் வெளிவந்த இந்தச் சோதனை முடிவுகளில் ஜெகன்மோகனுக்கு கரோனா இல்லை என்பது உறுதியானது. இதேபோல அறிகுறி உள்ள மக்கள் தாமாக முன்வந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

jaganmohanreddy corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe