ADVERTISEMENT

பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனை... ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய திட்டம்...

12:46 PM Dec 10, 2019 | kirubahar@nakk…

தெலங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பெரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இதுகுறித்து ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, "ஒட்டுமொத்த சமூகமும் வெட்கத்துடன் தலைகுனிய வேண்டிய ஒரு சம்பவம் இது. 26 வயதான ஒரு பெண் மருத்துவர் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். இதேபோன்ற சம்பவம் நம் மாநிலத்தில் நடந்தால், நாமும் நமது காவல்துறையும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் அப்பெண்ணின் குடும்பத்தாரின் வலியைப் பார்த்த பிறகு, நாம் அனைவரும் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டாலும் அது தவறல்ல என்று நினைத்தோம்.

நமது மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டம் தயார்செய்யப்படும். இதுபோன்ற குற்றங்கள் புரிவோர் மீது விசாரணைகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டும், மேலும் குற்றவாளிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT