Advertisment

வளர்ச்சிக்கான புதிய வழி... ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி திட்டம்...

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்ஜெகன்மோகன்.

Advertisment

jaganmohan reddy plans to create four capitals for andhrapradesh state

அந்தவகையில் ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக 4 தலைநகரங்களை அமைப்பதற்கான யோசனையில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. வெங்கடேஷ் கூறுகையில், "ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டு வருகிறார். நிர்வாக ரீதியாக ஆந்திர மாநிலத்தை 4 பகுதிகளாக பிரிக்கவும், சிறிய நிர்வாக பகுதிகளை ஏற்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆந்திராவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். மத்திய பாஜக தலைவர்களிடம் இதுதொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற்றம் அடையும்" என கூறினார்.

Advertisment

Andhra jaganmohanreddy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe