Advertisment

"இந்த சட்டத்தை அனுமதிக்கமாட்டோம்"... ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் அடுத்த திட்டமாக பார்க்கப்பட்ட என்.ஆர்.சி திட்டமும் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

Advertisment

jaganmohan reddy opposes nrc

நாடு முழுவதும் பல மாநிலங்களின் முதல்வர்களும், இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த சூழலில், என்.ஆர். சி யை ஆந்திராவில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு கூட்டத்தில் பேசிய அவர், எக்காரணம் கொண்டும் என்.ஆர்.சி யை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம். எப்போது நாங்கள் சிறுபான்மையினருக்கு துணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

Advertisment

caa nrc list Andhra jaganmohanreddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe