Advertisment

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு!

Jaganmohan Reddy meeting with Prime Minister Modi

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று (09.02.2024) சந்தித்து பேசினார்.அப்போது பிரதமர் மோடிக்கு திருப்பதி ஏழுமலையான் முழு உருவச்சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். இந்த சந்திப்பின் போது போலவரம் திட்டப்பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், மின்சாரத்துறை நிலுவைத் தொகையை தரவும் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் மோடியுடன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Andhra Delhi
இதையும் படியுங்கள்
Subscribe