ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி முதன்முதல் பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

jaganmohan reddy inagurates vahan mitra scheme

Advertisment

Advertisment

அந்தவகையில் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு உதவும் வகையிலான புதிய திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிவைத்துள்ளார். வாகன மித்ரா திட்டத்தின்படி ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி சொந்தமாக ஆட்டோ மற்றும் டாக்சி வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் ஓட்டுனர்களுக்கு இந்த தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு.ஜெகனின் இந்த திட்டத்திற்கு ஓட்டுனர்கள் நன்றி தெரிவித்ததோடு தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.