ADVERTISEMENT

அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி...

10:21 AM Sep 20, 2019 | kirubahar@nakk…

ஆந்திர அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் யாரும் இனி தனியார் கிளினிக்குகள் நடத்தக் கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, அரசு மருத்துவர்கள் யாரும் தனியாக கிளினிக் நடத்த கூடாது என தெரிவித்தார். மேலும் ஆந்திர மாநில அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ மருத்துவ அட்டை வைத்திருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூ.1,000 தாண்டினால், அதற்கு மேற்பட்ட செலவுகள் அரசால் ஏற்கப்படும் என்றும், மேலும் இத்திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் குடும்பத்தினருக்கு, நோயாளி குணம் அடையும் வரை மாதம் ரூ.5000 நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ், இனி நோயாளிகள் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT