ss

Advertisment

ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரை நேரடியாக என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது அரசுக்கு எதிராக நீதிபதிகளைச் செயல்பட வைக்கவும், சந்திரபாபு நாயுடு பலனடையும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாப்டேவுக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும்இடத்தில் உள்ள நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வரின் இந்த அரசியல் ரீதியிலான புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.