fghfghgf

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரீவா சோலங்கி பாஜகவில் இணைந்துள்ளார். நேற்று குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில விவசாய துறை அமைச்சர் ஆர்.சி.பால்டு முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். ரீவா சோலங்கி ஏற்கனவே மக்களுக்கு நன்கு தெரிந்த முகம் என்பதால், இந்த தேர்தலில் அவரது பங்கு பாஜக வுக்கு மிக முக்கியமான ஒன்று என அப்பகுதி பாஜக தலைவர் கூறியுள்ளார். ஜடேஜாவின் மனைவியான ரீவா, ஏற்கனவே கர்ணி சேனா அமைப்பின் மகளிர் அணிக்கு தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கர்ணி சேனா அமைப்புதான் பத்மாவத் திரைப்படம் வெளியானபோது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment