Skip to main content

நோயை உண்டாக்குமா...? நோயைக் குணப்படுத்துமா...? பசு கோமியம் குறித்து வெளியான ஆராய்ச்சி முடிவுகள்!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

IVRI Research results Cow  urine

 

வலதுசாரி ஆதரவாளர்களும், வலதுசாரியினரும், தொடர்ந்து பசு கோமியம் புனிதம் அது மருத்துவ குணம் கொண்டது என பல்வேறு கருத்துகளை பொதுவெளியில் சொல்லிவருகின்றனர். உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, தடுப்பூசிகளை பரவலாக்கி கொரோனாவை கட்டுபடுத்தி வந்த சமயத்தில், உத்தரப்பிரதேசம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், “நான் தினமும் கோமியம் (பசுவின் சிறுநீர்) குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையானது. 

 

அதேபோல் சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே புற்றுநோய் சிகிச்சைக்கு பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்தி மருந்து தயாரிப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். 

 

IVRI Research results Cow  urine

 

இந்நிலையில், பசுவின் கோமியத்தை மனிதர்கள் அருந்துவது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரலியில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்று பி.எச்டி மாணவர்கள், அங்கு பணியாற்றிவரும் போஜ் ராஜ் சிங் என்பவரின் தலைமையில், பசு மற்றும் எருமை மாடுகளின் கோமியம் அருந்துவதற்கு உகந்ததா, கோமியம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பன குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 

 

IVRI Research results Cow  urine

 

இந்த ஆராய்ச்சி முடிவில், பசு மற்றும் எருமை கோமியங்களில் மனிதர்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தப் பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்றும் மற்றும் வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மனிதர்கள் கோமியத்தை நேரடியாக உட்கொள்வது உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

chennai old age person cow incident

 

சாலையில் திரிந்த மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சையில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில், கடந்த 18 ஆம் தேதி காலை சுந்தரம் (வயது 80) என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்று முதியவர் சுந்தரத்தை முட்டித் தூக்கி வீசியது. காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மாடு முட்டி வீசும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மாடுகளை பிடித்தனர். இதில் முதியவர் சுந்தரத்தை மூட்டித் தூக்கி வீசிய கிர் ரக காளை மாடும் பிடிபட்டது. இந்த மாடு கோவிலுக்குச் சொந்தமான மாடு என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், கோயில் நிர்வாகம் அதற்கு  மறுப்பு தெரிவித்திருந்தது. அதனையடுத்து பிடிக்கப்பட்ட அந்த மாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாடு முட்டியதில் காயமடைந்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

 

 

Next Story

தெள்ளத் தெளிவான தென்துருவ நிலவு; கால் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் - 3

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

A clear South Pole Moon; Chandrayaan-3 waiting to set foot

 

இந்தியா சார்பில் சந்திரயான்-3 கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் இடத்தில் உந்து சக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தி வந்தனர்.

 

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்திரயான் - 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்க உள்ளது.

 

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா நிலவின் மேற்பரப்பை மிக அருகிலிருந்து துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியதாக இஸ்ரோ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. லேண்டரின் சுற்றுப்பாதையின் உயரம் மேலும் குறைக்கும் நடவடிக்கை இன்று மாலை 4 மணிக்கு மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது விக்ரம் லேண்டர் அனுப்பிய இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நிலவில் உள்ள மேடு, பள்ளங்கள் மற்றும் மேற்பரப்பின் தன்மை ஆகியவை இந்த புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னரே நிலவின் புகைப்படங்களை லேண்டர் அனுப்பியிருந்தாலும் இந்த தெளிவான புகைப்படம் இஸ்ரோவிற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

சந்திரயான் - 3 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. ஏற்கனவே நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.