Advertisment

'2000 ரூபாயை மாற்ற இது கட்டாயம்' - வங்கி ஊழியரின் செயலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

'It's wild to change 2000 rupees' - Bank employee's action shocks customers

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Advertisment

வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டைகளை வழங்கத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு வங்கியில் 2000 ரூபாயை மாற்ற வந்த வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் அடையாள அட்டையை கேட்டு நிர்பந்திப்பது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நிகழ்ந்தஇந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள வாடிக்கையாளர்கள், அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி முறையாக அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe