Advertisment

"பாஜக அரசு மனிதாபிமானமற்றது..அது மக்களை நேசிக்கவில்லை" - மம்தா விமர்சனம்!

MAMATA BANERJEE

திரிணாமூல்காங்கிரஸின்மாணவர் அமைப்பு 1998 ஆம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்டது. இதனையடுத்துமாணவர் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு விழாவில் மேற்குவங்க முதல்வரும்திரிணாமூல்காங்கிரஸின்தலைவருமான மம்தா, கலந்துகொண்டு பேசினார். அப்போது பாஜகவை விமர்சித்த அவர் சிபிஐயால் தங்களுக்குஎந்த பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

மாணவர் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு விழாவில் மம்தா பேசியது வருமாறு;

மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் குரலையும், சமூகவலைத்தளங்களில் எழும் குரலையும் பாஜக அடங்குகிறது.பாஜக அரசு மனிதாபிமானமற்றது. அது மக்களை நேசிக்கவில்லை, நாட்டை விற்கிறது.

Advertisment

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில், 5 பாஜக தொண்டர்களும் 16 திரிணாமூல் ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர் .சிபிஐயால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் அவர்கள் (சிபிஐ) ஏன் பாஜக தலைவர்களை கிராமங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்? தேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட அனைத்து ஆணையங்களும்அரசியலாகிவிட்டன. அந்த ஆணையங்களின் உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள்.

இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.

Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe