Advertisment

"புதுச்சேரியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்!" - ஆளுநர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு!

publive-image

Advertisment

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில், "மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துதல், புதுச்சேரியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையுடன் பிற அவசிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஊடரங்கு முறை ஏழை எளிய மக்களின் வாழ்வாதாத்தை பாதிக்கும் என்பதால் ‘புதுச்சேரி மாதிரி’ கரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தல், இரண்டாவது அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றல், சித்தா/இயற்கை மருத்துவ முறை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புத்துணர்ச்சி தரும் என்பதால், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா/இயற்கை மருத்துவ முறைகளை கையாளுதல், மக்கள் எளிதில் சிகிச்சை பெற வசதியாக அதற்காக தனி மையம் அமைத்தல், அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூலிகை சாறு, ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தடுப்பூசியை போடுவதை தீவிரப்படுத்தல், 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் துரிதப்படுத்தல், கோவிட் கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்குதல், நடமாடும் பல்ஸ் ஆக்சிமீட்டர் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருத்தல், மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தல். கரரோனா நடைமுறைகளை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும், அவரசகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

கரோனா நோய்ப்பரவல் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராணவாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை தயார்படுத்த வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும், பொதுமக்கள் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும்.

Advertisment

பொது இடங்களில் கிருமிநாசினி மையங்களை திறக்க வேண்டும் எனவும், கரோனா விழிப்புணர்வு தடுப்பு நடவடடிக்கைகளிள் அரசு சாரா அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித்திட்டத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோரை ஈடுபடுத்தலாம் என்றும் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசுத் துறைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்" என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe